
ஆர்.எஸ்.மங்கலம்: திருப்பாலைக்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் ராஜூ தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர் கவிஞர் தமிழ்கனல் பேசினார். ஆசிரியர் அன்பின் அமலன் ஆண்டறிக்கை வாசித்தார்.
விளையாட்டுப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கினர். ஆசிரியர் பயிற்றுநர் உலக நாதன், கிராமத் தலைவர் தமிழ்காளை, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ராணி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாத்திமா கனி பங்கேற்றனர்.
ராமநாதபுரம்: பரமக்குடி ஒன்றியம் கீழப்பெருங்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. மாவட்ட கல்விஅலுவலர் முருகம்மாள் தலைமை வகித்தார். வட்டாரக்கல்வி அலுவலர் சுதாமதி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை உமாமகேஸ்வரி வரவேற்றார்.
ஆசிரியர்கள் ஜானகி, ஷீலா, ஹரிகிருஷ்ணன், ரம்யா, சத்துணவு அமைப்பாளர் முருகேஸ்வரிஉட்பட கிராம மக்கள், பெற்றோர் கலந்து கொண்டனர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.