
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார் : -முதுகுளத்துார் அருகே இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா, பரிசளிப்பு விழா நடந்தது.
தலைமையாசிரியர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் பொற்கொடி, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஆரோக்கியமேரி, ஊர் தலைவர் சந்திரன் முன்னிலை வகித்தனர்.
மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தனித்தனியாக விளையாட்டு போட்டிகள்நடந்தது. தேர்வில் அதிக மதிப்பெண், விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினர். மாணவர்களின் நடனம், யோகா, பிரமிடு உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடந்தது.