
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி சவுராஷ்டிரா இளநிலை பள்ளி ஆண்டு விழா நடந்தது.
சவுராஷ்டிரா கல்விக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். உபதலைவர் மனோகரன், செயலாளர் ரெங்கன், பொருளாளர் பரசுராமன், நர்சரி பள்ளி தாளாளர் மணிகண்டன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
இளநிலை பள்ளி தாளாளர் மாருதிராம் வரவேற்றார்.
தலைமை ஆசிரியை புஷ்பவல்லி ஆண்டறிக்கை வாசித்தார். இன்ஜினியர் நீலகண்டன் ஊர்வலத்தை துவக்கினார்.
மதுரை ரவீந்திரநாதன், லட்சுமணன், தாசில்தார்கள் வரதன், கோகுல்நாத், அமர்நாத் பரிசுகளை வழங்கினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்திரா நகர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீகாந்த் நன்றி கூறினார்.