நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை அருகே புல்லந்தை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விளையாட்டு விழா, ஆண்டு விழா நடந்தது.
வட்டார கல்வி அலுவலர் ஜெயா தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் உஷாராணி முன்னிலை வகித்தார். வட்டார வளமையை மேற்பார்வையாளர் சேதுபதி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் முனீஸ்வரி பங்கேற்றனர். தலைமையாசிரியர் செந்தில்நாதன் ஆண்டறிக்கை வாசித்தார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
ஏற்பாடுகளை ஆசிரியர் பேச்சியம்மாள், சத்துணவு அமைப்பாளர் மீனாதேவி, லட்சுமி, முனீஸ்வரி, ரவி, திவ்யா செய்தனர்.

