
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிக்கல்: சிக்கல் அருகே வாலிநோக்கம் விலக்கு சந்திரா நகர் சரண்யா மெட்ரிகுலேஷன் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
கீழக்கரை டி.எஸ்.பி., பாஸ்கரன் தலைமை வகித்தார். ஸ்ரீ வெற்றி விநாயகர் கல்வி குழுமத்தின் பள்ளி தாளாளர் பால்சாமி முன்னிலை வகித்தார். முதல்வர் ரவிகாந்த் ஆண்டறிக்கை வாசித்தார். மாணவர் தன்னம்பிக்கை பேச்சாளரும் முன்னாள் பேராசிரியருமான சேவியர் ராஜப்பா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டது.