நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: -பரமக்குடி அருகே கமுதக்குடியில் இயங்கும் மவுண்ட் வேர்ல்ட் சி.பி.எஸ்.சி., பள்ளியின் 10வது ஆண்டு விழா நடந்தது.
கல்வி குழு தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். பள்ளி தலைவர் பூமிநாதன் முன்னிலை வகித்தார். செயலாளர் நாகரெத்தினம் வரவேற்றார். பரமக்குடி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் பள்ளி மாணவர்களுக்கு பரிசளித்து பேசினார். பள்ளி முதல்வர் புருஷோத்தமன் ஆண்டறிக்கை வாசித்தார். கலை நிகழ்ச்சி நடந்தது. பொருளாளர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

