ADDED : மார் 31, 2026 06:17 PM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: பரமக்குடி ஒன்றியம் தெளிச்சாத்த நல்லுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா கே.ஜி., குழந்தைகள் பட்டமளிப்பு விழா, விளையாட்டு விழா நடந்தது. பரமக்குடி வட்டார கல்வி அலுவலர் ஜெயா தலைமை வகித்தார். தலைமையாசிரியர் உமா மகேஸ்வரி வரவேற்றார்.
விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர் பூர்ண ஜெயம் சான்றிதழும் பரிசுகளும் வழங்கினார். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள், பெற்றோர், எஸ். எம். சி., உறுப்பினர்கள் பங்கேற்றனர்.-----
