ADDED : ஏப் 18, 2026 07:54 PM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பப்ளிக் பள்ளி ஆண்டு விழா தாளாளர் ராஜாத்தி அப்துல்லா தலைமையில் நடந்தது. முதல்வர் பார்வதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பேச்சாளர் பர்வீன் சுல்தானா கலந்து கொண்டு பேசினார்.
டாக்டர் அப்துல்லா நினைவு பரிசு மற்றும் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். ஆண்டு விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாத்திமா சின்னத்துரை பரிசு வழங்கினார். விழாவில் பங்கேற்ற பெற்றோர்களுக்கு குலுக்கல் முறையில் கூப்பன் மூலம் பரிசுகள் வழங்கப்பட்டது. துணை முதல்வர் விசாலாட்சி நன்றி கூறினார்.
