ADDED : ஏப் 11, 2025 04:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி புதுநகர் டாக்டர் அப்துல் கலாம் பப்ளிக் பள்ளி 8ம் ஆண்டு விழா நடந்தது.
பள்ளி தலைவர் முகைதீன் முசாபர் அலி தலைமை வகித்தார். ஆர்வம் ஐ.ஏ.எஸ்., அகாடமி சிபிகுமரன், கம்பன் கழக நிர்வாக இயக்குனர் சுந்தரராஜன், பேராசிரியர் ஆரோக்கியசாமி, ஐக்கிய ஜமாத் மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்னுல் ஆலம் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசளித்து பேசினர்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. யோகா, சிலம்பம், கராத்தே, அபாகஸ் மற்றும்பிரமிட் வடிவில் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர்.

