ADDED : ஜன 08, 2024 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை : ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் செய்யது அப்பாஸ் தலைமை வகித்தார்.
பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி முன்னிலை வகித்தார். அறிவியல் ஆசிரியர் பானுமதி வரவேற்றார்.
கூட்டத்தில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்துதல், குழந்தைகளின் ஆரோக்கியம், போதையில்லாத பள்ளி வளாகம் போன்றவை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதிய வகுப்பறை கட்டடத்திற்கு இடம் வழங்கிய பள்ளி முன்னாள் மாணவர் தமீம் அன்சாரிக்கு நன்றி கூறினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தர்மராஜ், முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் பெற்றோர் பங்கேற்றனர்.