/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிளஸ் 2 விடுமுறையில் இருந்த பள்ளி மாணவர் விபத்தில் பலி
/
பிளஸ் 2 விடுமுறையில் இருந்த பள்ளி மாணவர் விபத்தில் பலி
பிளஸ் 2 விடுமுறையில் இருந்த பள்ளி மாணவர் விபத்தில் பலி
பிளஸ் 2 விடுமுறையில் இருந்த பள்ளி மாணவர் விபத்தில் பலி
ADDED : ஏப் 09, 2025 07:22 AM

பரமக்குடி, : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வாகைக்குளம் இருவழிச் சாலையில் பிளஸ் 2 தேர்வு முடிந்து விடுமுறையில் இருந்த மாணவன் விபத்தில் பலியானான்.
பரமக்குடி அருகே அரியக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் தனியார் பஸ் டிரைவர் கண்ணன். இவரது மகன் முகேஷ் 18, சத்திரக்குடி பகுதி தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து தேர்வு எழுதிய நிலையில் விடுமுறையில் இருந்தார்.
நேற்று மதியம் 3:00 மணிக்கு சத்திரக்குடியில் இருந்து பரமக்குடி நோக்கி டூவீலரில் வந்தார்.
அப்போது வாகைக்குளம் இருவழிச் சாலையில் டிப்பர் லாரியை கடக்க முயன்ற போது நிலை தடுமாறி விழுந்ததில் லாரியின் டயர் முகேஷ் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பரமக்குடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.