ADDED : டிச 03, 2024 05:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பாரதிநகர்கலைவாணி மெட்ரிகுலேஷன் பள்ளியின் 40 மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் நடந்த யோகாவில் சாதனை படைத்தனர்.
ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாநில அளவிலான85வது யோகாசன போட்டி நேற்று முன்தினம் நடந்தது. பல்வேறு வகை யோகாசனங்களை மாணவர்கள் செய்து காட்டினர்.
யோகாசனப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி பிரார்த்தனைக் கூட்டத்தில் பரிசு, சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன.
கலைவாணி மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் ஜெகதீஸ்வரன், முதல்வர் சாந்தினி, இன்டர்நேஷனல் யோகா ஸ்பெசலிஸ்ட் சரவணன், ஆசிரியர் அனுஸ்ரீ உட்பட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். யோகாசன சிறப்புகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.