/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளி மாணவர்களின் கடலோர துாய்மைப் பணி
/
பள்ளி மாணவர்களின் கடலோர துாய்மைப் பணி
ADDED : செப் 29, 2024 07:55 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் மற்றும் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து கடற்கரையில் துாய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
சர்வதேச கடலோர துாய்மை தினத்தையொட்டி தங்கச்சிமடம் அருகே அரியாங்குண்டு கடற்கரையில் பள்ளி மாணவர்களின் துாய்மைப் பணியை தங்கச்சிமடம் ஊராட்சி தலைவி குயின்மேரி துவக்கி வைத்தார்.
கடலோரத்தில் கிடந்த பேய் வலைகள், பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்கள் என 250 கிலோ குப்பையை மாணவர்கள் சேகரித்தனர்.
இதனை ஊராட்சி துாய்மைப் பணியாளரிடம் ஒப்படைத்தனர். சுவாமிநாதன் அறக்கட்டளை அலுவலர்கள் சிபிந்தர், கெவின்குமார், பள்ளி என்.எஸ்.எஸ்., அலுவலர் சுந்தர், ஆசிரியர்கள் செந்தில்குமார், ஜெரோம் உட்பட ஏராளமான மாணவர்கள் துாய்மைப் பணி செய்தனர்.
செப்.27 முதல் அக்.3 வரை ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதியில் என்.எஸ்.எஸ்., மாணவர்களின் துாய்மைப் பணி நடக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.