/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காம்பவுண்ட் சுவர் சேதம் பள்ளி மாணவர்கள் அச்சம்
/
காம்பவுண்ட் சுவர் சேதம் பள்ளி மாணவர்கள் அச்சம்
ADDED : டிச 23, 2024 04:42 AM

சாயல்குடி: -சாயல்குடி அருகே மூக்கையூர் வடக்கு முக்கையூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காம்பவுண்டு சுவர் சேதமடைந்துள்ளதால் மாணவர்களுக்கு விபத்து அபாயம் உள்ளது.
வடக்கு முக்கையூர் தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5 வகுப்பு வரை 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். தலைமையாசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் பணி புரிகின்றனர்.
இந்நிலையில் பள்ளியை சுற்றியுள்ள காம்பவுண்டு சுவர் சமீபத்தில் பெய்த மழையால் இடிந்து விழுந்துள்ளது.
பா.ஜ., கடலாடி தெற்கு ஒன்றிய தலைவர் ராஜசேகர பாண்டியன் கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட காம்பவுண்டு சுவர் சேதமடைந்த நிலையில் இடியும் தருவாயில் உள்ளது.
இதனால் மாணவர்களை காம்பவுண்டு சுவர் அருகே செல்ல விடாமல் ஆசிரியர்கள் தடுத்துள்ளனர். எனவே காம்பவுண்ட் சுவரை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

