/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளி மாணவர்கள் அறிவியல் சுற்றுலா
/
பள்ளி மாணவர்கள் அறிவியல் சுற்றுலா
ADDED : டிச 08, 2025 06:26 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் 'ஸ்டீம்' திட்டத்தில் மாணவர்களை எதிர்கால தொழில்நுட்ப துறைகளுக்கு தயார்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இதில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய நான்கு துறைகளை ஒருங்கிணைத்து நிஜ வாழ்க்கை சிக்கல்களுக்கு தீர்வு காணவும், விமர்சன சிந்தனை, படைப்பாற்றல், பகுத்தறியும் திறன்களை வளர்க்கும் ஒருங்கிணைந்த கற்பிக்கும் முறையாகும்.
இதன் மூலம் முதுகுளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியில் இருந்து 28 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கல்விச் சுற்றுலா பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் காஜா நிஜாமுதீன் குரைஷி தலைமையில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
மாணவர்களை மண்டபம் கடல் மீன் ஆராய்ச்சி நிலையம், புதுமடம் கடலோரப் படிப்பு மையம் பகுதிகளுக்கு சென்றனர்.
ஏற்பாடுகளை கமுதி மேற்பார்வையாளர் ஸ்ரீராம், வட்டார வள மையம் ஒருங்கிணைப்பாளர்கள் சண்முகப்பிரியா, மதிப்பிரியா உட்பட ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்தனர்.

