/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாநில அளவிலான ஹாக்கிப்போட்டி தங்கம் வென்ற பள்ளி மாணவர்கள்
/
மாநில அளவிலான ஹாக்கிப்போட்டி தங்கம் வென்ற பள்ளி மாணவர்கள்
மாநில அளவிலான ஹாக்கிப்போட்டி தங்கம் வென்ற பள்ளி மாணவர்கள்
மாநில அளவிலான ஹாக்கிப்போட்டி தங்கம் வென்ற பள்ளி மாணவர்கள்
ADDED : பிப் 13, 2024 04:28 AM

ராமநாதபுரம் : பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த மாநில அளவிலான ஹாக்கிப்போட்டியில் ராமநாதபுரம் மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பள்ளிகல்விதுறை சார்பில், மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் 2023 டிச 5 முதல் 7 வரை நடந்தது. 17 வயதிற்குட்பட்ட பிரிவில் ராமநாதபுரம் டி.டி.விநாயகர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் விளையாட்டு விடுதி மாணவர்கள் பங்கேற்று முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றனர்.
இதுபோல புதுக்கோட்டையில் நடந்த 14 வயதிற்குட்பட்ட பிரிவிலும் வென்று தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.
மாவட்டத்திற்கு பெருமை தேடித்தந்த மாணவர்கள், ஹாக்கிப் பயிற்சியாளர் மணிகண்டன் ஆகியோரை கலெக்டர் விஷ்ணு சந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார், மாவட்ட ஹாக்கி சங்க செயலாளர் கிழவன் சேதுபதி, டி.டி.விநாயகர் மே.நி., பள்ளி செயலாளர் ரத்தினசபாபதி, தலைமயாசிரியர் வள்ளுவன், ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.