/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாரணர் இயக்க முதலுதவி விழிப்புணர்வு
/
சாரணர் இயக்க முதலுதவி விழிப்புணர்வு
ADDED : நவ 20, 2025 04:19 AM
நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் ஊராட்சி கொட்டகுடி, உதயகுடி பகுதிகளில் சாரண, சாரணியர் இயக்க முதலுதவி விழிப்புணர்வு முகாம் நடந்தது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட சாரண, சாரணிய முதன்மை ஆணையர் ரெஜினி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ரவி ஆலோசனையின் படி முகாம் நடத்தப்பட்டது. வட்டாரக் கல்வி அலுவலர்கள் உஷாராணி, பாஸ்கரன் தலைமை வகித்தனர். தலைமை ஆசிரியர்கள் பால்தாய், ரெங்கநாயகி முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் செல்வராஜ் துவக்கி வைத்தார்.
ஸ்ரீ சாய் சக்தி நிறுவன தலைவர் சேகர், வனிதா, அவசர உதவி எண் 108 உதவியாளர்கள் கார்த்திக், சக்திமாரி உள்ளிட்டோர் முதுலுதவி அளிப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அப்போது மாணவர்கள் மத்தியில் விபத்தின் போது அதில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்க வேண்டும் என்ற செயல் விளக்கம் அளித்தனர்.

