/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
துப்புரவு பணியாளருக்கு அரிவாள் வெட்டு
/
துப்புரவு பணியாளருக்கு அரிவாள் வெட்டு
ADDED : ஜூன் 30, 2025 04:54 AM
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே வரவணி பகுதியைச் சேர்ந்த கோட்டை மகன் பிரசாத் 31, பேரூராட்சி துப்புரவு பணியாளர். நேற்று முன்தினம் மாலை பிரசாத் டூவீலரில் ஆர்.எஸ். மங்கலம் நோக்கி சென்றார்.
செங்குடி அருகே சென்ற போது பிரசாத் ஓட்டிச் சென்ற டூவீலர் ரோட்டில் சென்ற ஆடுகளின் மீது மோதியதில் விபத்திற்குள்ளானார். இந்த நிலையில் ஆட்டின் உரிமையாளரான அதே பகுதியைச் சேர்ந்த ராமு 35, பிரசாந்தை தாக்கியதுடன், ஆடுகளுக்கு இலைகளை அறுக்க பயன்படுத்தும், அரிவாளை வைத்து பிரசாந்தை வெட்டினார்.
இதில் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்ட பிரசாத், ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரில் ராமு மீது ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் எஸ்.ஐ.,முகமது சைபுல் கிஷாம் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.