தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கடல் நீர்மட்டம் உயர்வா விஞ்ஞானிகள் ஆய்வு

கடல் நீர்மட்டம் உயர்வா விஞ்ஞானிகள் ஆய்வு

கடல் நீர்மட்டம் உயர்வா விஞ்ஞானிகள் ஆய்வு


ADDED : ஜன 10, 2024 11:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2024 11:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் கடல்நீர் மட்டம் உயர்ந்து கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதா என தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் உள்ள நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடிக்கின்றனர்.

இக்கடலானது அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி போல் ஆண்டு முழுவதும் மீனவர்களுக்கு அதிக மீன்கள் கிடைக்கும் அட்சய பாத்திரமாக உள்ளது.

மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இக்கடலின் கரை பகுதியில் கடல்நீர் மட்டம் உயர்ந்து மண் அரிப்பு ஏற்படுத்தி உள்ளதா, இதன் மூலம் எதிர்காலத்தில் மீனவர்கள் பாதிக்கப்படுவரா என்பது குறித்து தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானிகள் ராமேஸ்வரம், மண்டபம் கடற்கரையில் கருவி மூலம் ஆய்வு செய்தனர்.

ஓரிரு மாதங்களுக்கு பின் இந்த ஆய்வு அறிக்கையை மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்க உள்ளதாக தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us