/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விலை கிடைக்காததால்வீணாகும் கடல் சிப்பிகள்
/
விலை கிடைக்காததால்வீணாகும் கடல் சிப்பிகள்
ADDED : நவ 18, 2023 04:15 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் போதி விலை கிடைக்காததால் சிப்பிகள் தேக்கமடைந்துவீணாகிறது.
ராமநாதபுரம் மாவட்டம்தேவிப்பட்டினம், திருப்பாலைக்குடி, தொண்டி, திருப்புல்லாணி, அழகன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கடற்கரை அமைந்துஉள்ளது.
இப்பகுதியில் தொழிலாளர்கள் மீன் பிடிக்கும்போது வலையில் சிப்பிகள், சங்குகள், கடல் பாசிகள் கிடைக்கிறது.
இதில் மீன்களை தவிர்த்து சங்குகள், சிப்பிகளை கடற்கரை யோரங்களில் விட்டு விடுகின்றனர்.சில தொழிலாளர்கள்சிப்பி, சங்குகளை சேகரித்து கிலோ ரூ.5 முதல் ரூ.10 வரை தரத்திற்கு ஏற்ப விற்கின்றனர்.
இந்த சிப்பிகளில் அலங்காரப்பொருட்கள் தயாரித்து ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய சுற்றுலா தலங்களில் விற்கின்றனர். கடந்த சில நாட்களாக கடலின் சீற்றத்தால் சிப்பிகள் அதிகளவில் கடற்கரையில்ஒதுங்கியுள்ளன. இருப்பினும் போதிய விலை கிடைக்காததால் சேகரிக்காமல் கடற்கரையில் குவித்துள்ளனர்.
மீனவர்கள் கூறுகையில், சிப்பிகளை சேகரித்துநன்றாக காயவைத்து வியாபாரிகள், மகளிர் குழுவினரிடம் விற்கிறோம். தற்போதுகடல் நீரோட்டத்தின் வேகம் காரணமாக மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சேகரிக்க ஆளில்லாமல்ஆற்றங்கரை கடற்கரையில் சங்கு, சிப்பிகள் குவிந்துள்ளது என்றனர்.