தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரத்தில் உள்வாங்கிய கடல்

 ராமேஸ்வரத்தில் உள்வாங்கிய கடல்

 ராமேஸ்வரத்தில் உள்வாங்கிய கடல்


ADDED : ஜூலை 04, 2026 11:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2026 11:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியதால் துறைமுகம் கடற்கரையில் பாசி படர்ந்த மணல் பரப்பு வெளியில் தெரிந்தது.

ராமேஸ்வரம் பகுதியில் சில நாட்களாக தென் மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்து சூறாவளியாக வீசுகிறது. இதனால் நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை ராமேஸ்வரம் துறைமுகம் கடற்கரையில் 200 மீ., துாரம் கடல் உள்வாங்கியது. இதில் பாசி படர்ந்த மணல் பரப்பு வெளியில் தெரிந்தது.

கரையில் நிறுத்தியிருந்த நாட்டுப்படகுகள் தரை தட்டி கிடந்தது. மதியம் 2:00 மணிக்கு மேல் கடல் நீர் மட்டம் உயர்ந்ததும் கடற்கரை இயல்பு நிலைக்கு திரும்பியது. தென் மேற்கு பருவக்காற்று சீசனில் கடல்நீர் உள்வாங்குவதும் சில மணி நேரத்திற்கு பின் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவது சகஜம் என மீனவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us