/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு உரிமம், புதிவு பெறாமல் செயல்படும் இல்லங்களுக்கு 'சீல்'; கலெக்டர் எச்சரிக்கை
/
அரசு உரிமம், புதிவு பெறாமல் செயல்படும் இல்லங்களுக்கு 'சீல்'; கலெக்டர் எச்சரிக்கை
அரசு உரிமம், புதிவு பெறாமல் செயல்படும் இல்லங்களுக்கு 'சீல்'; கலெக்டர் எச்சரிக்கை
அரசு உரிமம், புதிவு பெறாமல் செயல்படும் இல்லங்களுக்கு 'சீல்'; கலெக்டர் எச்சரிக்கை
ADDED : நவ 13, 2024 09:57 PM
ராமநாதபுரம் ; மாவட்டத்தில் அரசு உரிமம், பதிவு பெறாமல் செயல்படும் பாதுகாப்பு இல்லங்களுக்கு 'சீல்' வைக்கப்படும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் எச்சரித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
குழந்தைகள், முதியோர், மனவளர்ச்சி குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள், போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு, மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள், பெண்கள், குழந்தைகளுக்கான விடுதிகள் ஆகியவை சட்டப்படி பதிவு செய்ய வேண்டும்.
குழந்தைகள் இல்லங்களை இளைஞர் நீதி பராமரிப்பு, பாதுகாப்புச் சட்டம் 2015 ன் கீழும், முதியோர் இல்லங்களை, மூத்த குடிமக்களுக்கான சட்டம் 2007ன் படியும், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்களை மாற்றத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016ன் படியும் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்களை மனநல பாதுகாப்புச் சட்டம் 2017ன் படியும், பெண்கள், குழந்தைகளுக்கான விடுதிகள், இல்லங்களுக்கான சட்டம் 2014 படியும், மனநலன் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்களை தமிழ்நாடு மாநில நல ஆணையம் மனநல பாதுகாப்புச் சட்டம் 2017ன் படி பதிவு செய்ய வேண்டும்.
அவ்வாறு பதிவு பெறாமல் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள், போதை பொருள்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள் மற்றும் விடுதிகள் ஆகியவை உரிய முறையில் இணையத்தளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்படுகிறது. அதற்குள் விண்ணப்பிக்க தவறும் பட்சத்தில் இல்லங்களுக்கு 'சீல்' வைக்கப்படும் என்றார்.

