/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் கலெக்டர் தொடர் ஆய்வு
/
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் கலெக்டர் தொடர் ஆய்வு
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் கலெக்டர் தொடர் ஆய்வு
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் கலெக்டர் தொடர் ஆய்வு
ADDED : செப் 19, 2024 04:40 AM

பரமக்குடி: பரமக்குடி பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள், அரசு நலத்திட்ட பணிகளை கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் கலோன் ஆய்வு செய்தார்.
நயினார்கோவில், ராமநாதபுரம் இருவழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றும் திட்டத்தில் இருபுறங்களிலும் கரைகளை பலப்படுத்திட உத்தரவிட்டார்.
பாண்டியூரில் பொது சுகாதாரத் துறை, ஊராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை, குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீர் விநியோகிப்பதை கேட்டறிந்தார்.
நயினார்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் சிகிச்சை பிரிவு, ஆய்வக கட்டடம் கட்டப்படுவதை பார்த்தார். வாணியவல்லத்தில் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டார்.
பரமக்குடி ஜீவா நகரில் ரூ. 56 லட்சத்தில்பூங்கா, நடைபயிற்சி தளத்தை பார்வையிட்டு வாறுகால் வசதி மேற்கொள்ள கூறினார்.
வேளாண் துறை மண் பரிசோதனை மையத்தில்மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் பரமக்குடி ஊராட்சி ஒன்றியஅலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர், நகராட்சி கமிஷனர் முத்துச்சாமி, இன்ஜினியர் செல்வராணி, கவுன்சிலர் சீனிவாசன் உட்பட பலர் உடன் இருந்தனர்.