/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாலத்தில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களால் வாகனங்களுக்கு இடையூறு
/
பாலத்தில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களால் வாகனங்களுக்கு இடையூறு
பாலத்தில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களால் வாகனங்களுக்கு இடையூறு
பாலத்தில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களால் வாகனங்களுக்கு இடையூறு
ADDED : அக் 19, 2025 09:30 PM

வாலிநோக்கம்: வலிநோக்கும் செல்லும் கிழக்கு கடற்கரை சாலை பாலத்தில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களால் வாகன போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.
வலிநோக்கம் கிழக்கு கடற்கரை சாலை ராமேஸ்வரம், துாத்துக்குடிக்கு செல்லும் பிரதான வழியாக தினமும் நுாற்றுக்குமேற்பட்ட வாகனங்கள் சென்று, வருகின்றன.
இவ்வழியில் உள்ள பாலம் தொடர் பராமரிப்பு இல்லாமல் தடுப்புகளை மீறி சீமைக்கருவேல மரங்கள் இருபுறமும் அதி களவில் வளர்ந்துள்ளன. இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்கள் மீது உரசுகின்றன.
குறிப்பாக இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே சீமைக்கருவேல மரத்தை அகற்றிட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.