/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சித்தார்கோட்டை ரோட்டில் சீமைக்கருவேலம் ஆபத்து
/
சித்தார்கோட்டை ரோட்டில் சீமைக்கருவேலம் ஆபத்து
ADDED : டிச 13, 2025 06:44 AM

தேவிபட்டினம்: தேசிய நெடுஞ்சாலையில் தேவிபட்டினம் கோப்பேரிடம் விலக்கிலிருந்து சித்தார் கோட்டை, புதுவலசை, பனைக்குளம், அழகன்குளம் வழியாக ராமேஸ்வரம் செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டின் வழியாக 50க்கும் மேற்பட்ட கிராமத்தினரும், சுற்றுலாப் பயணிகளும் பயனடைகின்றனர்.
இந்த ரோட்டின் இரு புறங்களிலும் பல்வேறு பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளன. குறிப்பாக சித்தார் கோட்டை, அம்மாரி, புதுவலசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளதால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்துக்களில் சிக்கும் நிலை உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரோட்டோர சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.

