/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரேஷன் அரிசி ஏற்றி இறக்கியதில் ரூ. 950 கோடி இழப்பாம் யாரை ஏமாற்றுகிறார்கள் என சீமான் கேள்வி
/
ரேஷன் அரிசி ஏற்றி இறக்கியதில் ரூ. 950 கோடி இழப்பாம் யாரை ஏமாற்றுகிறார்கள் என சீமான் கேள்வி
ரேஷன் அரிசி ஏற்றி இறக்கியதில் ரூ. 950 கோடி இழப்பாம் யாரை ஏமாற்றுகிறார்கள் என சீமான் கேள்வி
ரேஷன் அரிசி ஏற்றி இறக்கியதில் ரூ. 950 கோடி இழப்பாம் யாரை ஏமாற்றுகிறார்கள் என சீமான் கேள்வி
ADDED : மார் 23, 2025 01:58 AM
ராமேஸ்வரம்: தமிழகத்தில் ரேஷன் அரிசி ஏற்றி இறக்கியதில் ரூ.950 கோடி இழப்பு ஏற்பட்டதாம். யாரை ஏமாற்றுகிறார்கள் என தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக சீமான் அளித்த பேட்டி: ஒரே நாடு ஒரே தேர்தல், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி முதல்வர்களை அழைத்து கூட்டம் நடத்தாத முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பே இல்லாத தொகுதி வரையறை குறித்து தற்போது கூட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது.
இலங்கையில் தமிழக மீனவர்களை சங்கிலியில் பிணைத்து அழைத்துச் செல்வது வேதனையாக உள்ளது. கேரள மீனவர்கள் பாதித்தால் அம்மாநில முதல்வர் களத்தில் இறங்கி போராடுகிறார்.
ஆனால் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுகிறார். விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்த போது தமிழக மீனவர்களை கைது செய்தார்களா, சுட்டுக் கொன்றார்களா. அந்த நிலை மீண்டும் வர வேண்டுமெனில் என்னை முதல்வர் ஆக்குங்கள். அதன் பிறகு மீனவர்கள் கைதானால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.
இலங்கையில் சீனா வலுவாக கால் பதித்துள்ளது. அம்பன்தோட்டா துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்துள்ளனர். இது நம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்டு இலங்கையுடன் பேச்சு நடத்தி மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
தமிழகத்தில் ரேஷன் அரிசியை ஏற்றி இறக்கியதில் ரூ.950 கோடி இழப்பு ஏற்பட்டதாம். அப்படியென்றால் அரிசியை கையில் அள்ளியா ஏற்றினார்கள். ஏழைகளை ஏமாற்றி கொள்ளை அடிக்கும் தமிழக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார்.