ADDED : பிப் 21, 2025 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி பகுதியில் ரேஷன் கார்டுதாரர்கள் விற்பனை செய்த ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி கோழிப்பண்ணைக்கு கொண்டு செல்வதற்காக சிலர் வீடுகள் தோறும் வாங்கி உள்ளனர்.
திருப்பாலைக்குடி பகுதியில் 25 மூடைகளில் ஒரு டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் வட்ட வழங்கல் அலுவலர் சிராஜுதீன் பறிமுதல் செய்தார்.
ரேஷன் அரிசியை பொதுமக்களிடமிருந்து விலைக்கு வாங்கியவர் தப்பியதால் அவர் குறித்து அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.