நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபட்டினம்; முத்துப்பேட்டை கவுசானல் கலை அறிவியல் கல்லுாரி வணிகவியல் துறை மற்றும் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் 'மெடிக்கனெட் - 25' என்ற கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி செயலர் எட்வர்ட் பிரான்சிஸ் தலைமை வகித்தார். கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் சுகன்யா வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக ராமநாதபுரம் பாபா மெடிக்கல் மேலாண்மை இயக்குனர் சேக் முகமது ரிஸ்வான், பல் டாக்டர் சரவணகுமார் பங்கேற்று பேசினர். பல் பராமரிப்பு விழிப்புணர்வு, நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை நடந்தது. மாணவர்கள், பேராசிரியர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.