/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நவ.30ல் மூத்தோர் தடகள விளையாட்டுப் போட்டி
/
நவ.30ல் மூத்தோர் தடகள விளையாட்டுப் போட்டி
ADDED : நவ 26, 2025 04:26 AM
ராமநாதபுரம்: மாவட்ட அளவிலான மூத்தோர் தடகள விளையாட்டுப் போட்டிகள் நவ., 30ல் ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது.
இதில் 30 வயதிற்கு மேற்பட்ட இருபாலரும் பங்கேற்கலாம்.போட்டிகள் 30 முதல் 35, 35 முதல் 40, 40 முதல் 45, 45 முதல் 50, 50 முதல் 55, 55 முதல் 60, 60 முதல் 65, 65 முதல் 70, 70 முதல் 75, 75 முதல் 80 என 5 வயது இடைவெளியில் ஒவ்வொரு குழுவிற்கும் தனித்தனியாக தடகள போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் டிச., 20, 21ல் காரைக்குடி அழகப்பா பல்கலை உடற்கல்வி விளையாட்டு அரங்கில் நடைபெறும் மாநில அளவிலான மூத்தோர் தடகளப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் ராமநாதபுரம் மூத்தோர் தடகள சங்கத் தலைவர் ஹனிபா ( 81441 42404), செயலாளர் சிவ பாலசுந்தர் ( 90438 27180), பொருளாளர் பாலா சரவணன் ( 99420 49549) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

