/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டிச.4 க்குள் எஸ்.ஐ.ஆர்., கணக்கெடுப்பு படிவங்களை ஒப்படைக்க வேண்டும்
/
டிச.4 க்குள் எஸ்.ஐ.ஆர்., கணக்கெடுப்பு படிவங்களை ஒப்படைக்க வேண்டும்
டிச.4 க்குள் எஸ்.ஐ.ஆர்., கணக்கெடுப்பு படிவங்களை ஒப்படைக்க வேண்டும்
டிச.4 க்குள் எஸ்.ஐ.ஆர்., கணக்கெடுப்பு படிவங்களை ஒப்படைக்க வேண்டும்
ADDED : நவ 26, 2025 04:25 AM
திருவாடானை: திருவாடானை சட்டசபை தொகுதியில் 60 சதவீதம் வாக்காளர் படிவங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. டிச.,4க்குள் கணக்கெடுப்பு படிவங்களை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி தகுதியுடைய வாக்காளர்கள் விடுபடக்கூடாது என்பதற்காக துாய்மையான வாக்காளர் பட்டியலை தயார் செய்யும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமுறை தற்போது நடந்து வருகிறது. கடந்த நவ., 4 முதல் கணக்கெடுப்பு பணி துவங்கி நடந்து வருகிறது. கணக்கீட்டு படிவத்தை அனைத்து வாக்காளர்களுக்கும் நேரடியாக வழங்கி அப்படிவங்களை திரும்ப பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவாடானை தாசில்தார் ஆண்டி கூறுகையில், திருவாடானை தாலுகாவில் 60 சதவீதம் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது.
கணக்கெடுப்பு படிவத்தை திருப்பி கொடுத்த வாக்காளர்கள் படிவங்களின் நிலையை இணையதளத்தில் சரிபார்க்கலாம். டிச.4 க்குள் கணக்கெடுப்பு படிவத்தை வாக்காளர்கள் தங்களது கடமையை உணர்ந்து ஒப்படைக்க வேண்டும் என்றார்.