UPDATED : நவ 04, 2026 08:32 PM
ADDED : நவ 04, 2026 08:30 PM
தேவிபட்டினம்: பட்டா, சிட்டா, சர்வர் அவ்வப்போது முடங்குவதால், நெல் பயிர் இன்சூரன்ஸ் செய்யும் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
வறட்சி மற்றும் இயற்கை சீற்றங்களால் சாகுபடி செய்யப்பட்டுள்ள தானியங்கள் பாதிக்கப்படும் போது, விவசாயிகள் இழப்பீடு பெரும் வகையில், விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்ஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தில் சாகுபடி செய்துள்ள நெல் விவசாயிகள், நவ.,16 க்குள், திட்டத்தில் பதிவு செய்ய அவகாசம் வழங்கப் பட்டுள்ளது. இதற்கு, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள விவசாய நிலங்களுக்கான, பட்டா சிட்டா; 10(1) அவசியமாகும். இந்த நிலையில், நேற்று காலை முதல் அவ்வப்போது பட்டா சிட்டா சர்வர் வேகம் குறைந்து முடக்குவதன் காரணமாக, நெல் பயிர்களுக்கு இன்சூரன்ஸ் செய்யும் விவசாயிகள் பட்டா சிட்டா எடுக்க முடியாமல் சிரமப்பட்டனர்.
