/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் குளம் போல கழிவுநீர்! நோயாளிகளுக்கு கூடுதல் தொற்று நோய் அபாயம்

ADDED : ஆக 04, 2024 06:10 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மகப்பேறு பிரிவின் பின்புறத்தில் குளம் போல கழிவுநீர் பல நாட்களாக தேங்கியுள்ளது. துர்நாற்றத்தால் நோயாளிகளுக்கு கூடுதலாக தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதுடன், அருகே குடியிருக்கும் பொதுமக்கள் நிம்மதியாக துாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கானவர்கள், சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு குடிநீர், கழிப்பறை அடிப்படை வசதிகள் பெயரளவில் உள்ளன.
குறிப்பாக கழிவுநீரை அகற்றி வெளியேற்றுவதில் தொடர்ந்து பிரச்னை ஏற்படுகிறது. கழிவுநீர் தேங்குவதும் அதனை நகராட்சி ஊழியர்கள் உறிஞ்சு எடுப்பதும் வாடிக்கையாகியுள்ளது. குறிப்பாக குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு பின்புறத்தில் குளம் போல கழிவுநீர் தேங்கியுள்ளது.
இதனால் துர்நாற்றத்தால் நோயாளிகள், ஆர்.ஆர்.சேதுபதிநகர் மக்கள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து ஆர்.ஆர்.சேதுபதிநகர் டாக்டர் ஏ.முகமது மொகைதீன் கூறியதாவது:
வீட்டின் பின்புறம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை காம்பவுண்ட் சுவர் அருகே குளம் போல கழிவுநீர் தேங்கியுள்ளது. கொசுத்தொல்லை துர்நாற்றத்தால் தினமும் நிம்மதியாக துாங்க முடியவில்லை.
இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவு, நகராட்சி, மருத்துவமனை நிர்வாகம் என புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பிரச்னைக்கு அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார்.-------