/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ.43.25 லட்சத்தில் கழிவுநீர் வாகனம்
/
ரூ.43.25 லட்சத்தில் கழிவுநீர் வாகனம்
ADDED : அக் 01, 2025 08:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி : ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளுக்கு கழிவு நீர் உறிஞ்சும் நவீன கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய டேங்கருடன் கூடிய மினி லாரி வழங்கப்பட்டுள்ளது.
இதில் தொண்டி பேரூராட்சிக்கு துாய்மை இந்தியா இயக்க திட்டத்தில் ரூ.43.25 லட்சத்தில் 6000 லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவு நீர் வாகனம் நேற்று வழங்கப்பட்டது.
இது தவிர குப்பை அள்ளுவற்காக ரூ.7.50 லட்சத்தில் வாகனம் வாங்கப்பட்டது. இரு வாகனங்களையும் பேரூராட்சி தலைவர் ஷாஜகான்பானு துவக்கி வைத்தார். செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர் கலந்து கொண்டனர்.