/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வறட்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு கை கொடுக்கும் கருவேல மரத்தொழில்
/
வறட்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு கை கொடுக்கும் கருவேல மரத்தொழில்
வறட்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு கை கொடுக்கும் கருவேல மரத்தொழில்
வறட்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு கை கொடுக்கும் கருவேல மரத்தொழில்
ADDED : அக் 01, 2025 08:06 AM
வறட்சி மாவட்டமான ராமநாதபுரத்தில் விவசாயிகளின் வருமானத்திற்கு சீமைக்கருவேலம் மர விறகு வெட்டும் தொழில் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், நயினார்கோவில், பரமக்குடி, முதுகுளத்துார், சாயல்குடி, கமுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் செப்., முதல் ஜன., வரையிலான காலகட்டத்தில் விவசாயிகள் நெல், மிளகாய் உள்ளிட்ட பல்வேறு தானிய வகைகளை சாகுபடி செய்து பயனடைகின்றனர்.
இதன் மூலம் இந்த காலகட்டத்தில் விவசாயிகளுக்கு வேலை வாய்ப்புகளும், வருவாயும் கிடைக்கிறது. இந்நிலையில், விவசாயம் செய்யும் காலம் தவிர்த்த மாதங்களில் பெரும்பாலான விவசாயிகள் வேலை வாய்ப்பில்லாததால் வருமானம் பாதிக்கப்படும் சூழலில் இருந்தனர். அவர்களுக்கு வாழ்வாதாரமும் வருவாயும் தரும் தொழிலாக மாவட்டத்தில் சீமைக்கருவேலம் விறகு வெட்டும் தொழில் அமைந்துள்ளது.
விவசாய பணிகள் இல்லாத நேரத்தில் தொழிலாளர்கள் சீமைக்கருவேல மரத்தின் விறகுகளை வெட்டி நேரடியாக எடையிட்டும், கரிமூட்டம் மூலம் கரிகளாக்கியும் விற்பனை செய்து வருவாய் ஈட்டுகின்றனர். இதன் மூலம் வறட்சி மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் கொடுக்கும் தொழிலாக சீமைக்கருவேலம் மர விறகு வெட்டும் தொழில் அமைந்துள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.