sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தென்னை மட்டை நாரில் கயிறு தயாரிப்பு குழுவாக இயங்கி வருமானம் ஈட்டும் குடும்பத்தினர்

/

தென்னை மட்டை நாரில் கயிறு தயாரிப்பு குழுவாக இயங்கி வருமானம் ஈட்டும் குடும்பத்தினர்

தென்னை மட்டை நாரில் கயிறு தயாரிப்பு குழுவாக இயங்கி வருமானம் ஈட்டும் குடும்பத்தினர்

தென்னை மட்டை நாரில் கயிறு தயாரிப்பு குழுவாக இயங்கி வருமானம் ஈட்டும் குடும்பத்தினர்


ADDED : அக் 01, 2025 08:06 AM

Google News

ADDED : அக் 01, 2025 08:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பாக ரெகுநாதபுரம், முத்துப்பேட்டை, பெரியபட்டினம், பத்திராதரவை, வண்ணாங்குண்டு, தினைக்குளம், சேதுக்கரை, களிமண்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு தென்னை மரங்கள் உள்ளன. தென்னை மட்டையில் இருந்து பிரித்து எடுக்கப்படும் நாரை வெயிலில் உலர வைத்து கயிறுகள் திரிக்கப்படுகின்றன.

முத்துப்பேட்டையில் இருந்து பெரியபட்டினம் செல்லும் வழியில் பத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் தென்னை நார் கயிறு தயாரிக்கும் சிறு குடிசைத் தொழில்களாக குடும்பத்துடன் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிளாஸ்டிக், ரப்பர், துணியால் செய்யப்பட்ட கால் மிதியடிகளை விட தென்னை நாரில் செய்யக்கூடிய பொருள்கள் மகத்துவம் வாய்ந்தது. சுற்றுப்புறத்துக்கு தீங்கு விளைவிக்காதது.

ரெகுநாதபுரம், பெருங்குளம், தாமரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தென்னை நார் கம்பெனியில் இருந்து மஞ்சு எனப்படும் நார் பண்டல்களை மொத்தமாக வாங்குகின்றனர். அவற்றை கயிறாக பிரித்து எடுக்கக்கூடிய பணியை செய்கின்றனர். முத்துப்பேட்டையை சேர்ந்த கயிறு திரிக்கும் தொழிலாளர்கள் கூறியதாவது:

ரெகுநாதபுரம், பெருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை மட்டை கம்பெனியில் இருந்து தேங்காய் நார் என்று சொல்லக்கூடிய மஞ்சு தும்புகளை விலைக்கு வாங்குகிறோம். 35 கிலோ தேங்காய் நார் பண்டல் ரூ.1000த்திற்கு வாங்குகிறோம். தேங்காய் நாரிலிருந்து தான் இந்த கயிறு உற்பத்தி செய்யப்படுகிறது.

சக்கரம் போன்ற அமைப்புடைய இயந்திரத்தில் தேங்காய் நாரை கைகளால் பிரித்து அதை அந்த இயந்திரத்தின் நுனியில் கட்டி அதன் பின்னர் தேங்காய் நாரை தொடர்ந்து கையால் திரித்து அந்த வட்ட வடிவ அமைப்பை கைகளால் சுற்றச் சுற்ற கயிறாக திரிக்கப்படும். இதற்கு வேலை நேரம் அதிகம். லாபம் மிகவும் குறைவு. இப்பகுதியில் தயாரிக்க கூடிய தென்னை நாரை ஒரு கட்டுக்கு ரூ.5க்கு எங்களிடம் வாங்கி கடைகளில் ரூ.10க்கு விற்பனை செய்கின்றனர்.

சாரக்கயிறு என்றும் கொச்சை கயிறு என்றும் அழைக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கயிறு மற்றும் நரம்பு கயிறுகளின் வருகையால் இது போன்ற தென்னை நார் கயிறுகளின் விற்பனையும் மந்தமாகி விட்டது. எனவே கயிறு விற்பனை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நிதி ஒதுக்கீடு செய்து எங்கள் வாழ்வாதாரத்துக்கு வழிகாட்ட வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us