/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குமரக்குடியில் ரூ.6 லட்சத்தில் அமைத்த கழிவுநீர் கால்வாய் மண்ணோடு புதைந்தது
/
குமரக்குடியில் ரூ.6 லட்சத்தில் அமைத்த கழிவுநீர் கால்வாய் மண்ணோடு புதைந்தது
குமரக்குடியில் ரூ.6 லட்சத்தில் அமைத்த கழிவுநீர் கால்வாய் மண்ணோடு புதைந்தது
குமரக்குடியில் ரூ.6 லட்சத்தில் அமைத்த கழிவுநீர் கால்வாய் மண்ணோடு புதைந்தது
ADDED : மார் 20, 2025 06:56 AM

பரமக்குடி: பரமக்குடி அருகே வேந்தோணி ஊராட்சி குமரக்குடி நெசவாளர் காலனியில் ரூ.6 லட்சத்தில் அமைத்த கழிவுநீர் கால்வாய் 2 ஆண்டில் மண்ணோடு மண்ணாக புதைந்து பயன்படாமல் வீணாகியது.
ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை 15 வது நிதிக்குழுமம் திட்டத்தில் 2021--22ல் கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணிகள் நடந்தது. இதற்காக ரூ.6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
குமரக்குடி கைத்தறி நெசவாளர்கள் காலனி வீடுகள் திட்டத்தில் இங்கு வீடுகள் கட்டி வசிக்கின்றனர். இவர்கள் ஓட்டு வீடுகளில் நெசவு பட்டறையை அமைத்து தொழில் செய்கின்றனர்.
குடிநீர், ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத சூழலில் தினமலர் நாளிதழ் தொடர்ந்து சுட்டி காட்டியது. தற்போது குறிப்பிட்ட பகுதிகளில் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை கடத்த வாய்க்கால் அமைக்கப்பட்டது. ஆனால் வாய்க்கால் கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் மட்டுமே கடந்த நிலையில் அனைத்தும் மண்ணோடு மண்ணாக புதைந்துள்ளது.
சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வாய்க்கால் தடம் மறைந்துள்ளது. இதேபோல் திட்ட மதிப்பீடு குறித்து கட்டப்பட்ட சுவரும் இடிந்து விழுந்துள்ளது.
இதனால் மீண்டும் பழைய நிலையில் கழிவுநீர் செல்ல வழியின்றி மழை நேரங்களில் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. ஆகவே அதிகாரிகள் வாய்க்காலை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.