ADDED : மார் 20, 2025 06:58 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் பேரூராட்சி பகுதியில் நாய்கள் கடித்ததில் ஆடுகள் உயிரிழந்தன.
முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நாய்கள் கூட்டமாக வருவதால் அடிக்கடி டூவீலர் விபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்துடன் செய்தி வெளியானது. வீடுகளில் வளர்க்கப்பட்டு வரும் ஆடுகளை கூட்டமாக சென்று நாய்கள் கடிக்கின்றன.
முதுகுளத்துார் சேர்ந்த வடிவேல் கூறுகையில், பத்துக்கு மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வந்தேன். தற்போது ஆடுகளை குறிவைத்து ஏராளமான வெறி நாய்கள் கடிக்கின்றன. ஏராளமான ஆடுகள் உயிரிழந்தன. நேற்று பேரூராட்சி அலுவலகம் அருகே ஒரு ஆட்டை கடித்து கொன்றன. தொடர்ந்து இதுபோன்று நடப்பதால் மக்கள் அச்சப்படுகின்றனர். நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.