/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடையை உடைத்து பணம் பொருட்கள் திருட்டு
/
கடையை உடைத்து பணம் பொருட்கள் திருட்டு
ADDED : நவ 07, 2025 11:13 PM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் காந்தி சிலை அருகே உள்ள பலசரக்கு கடையை உடைத்து ரூ.20 ஆயிரம் மற்றும் பொருட்களை திருடிச் சென்றனர்.
முதுகுளத்துார் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் அப்துல் மாலிக். இவர் காந்தி சிலை அருகே பலசரக்கு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
அதிகாலையில் கடை உடைக்கப்பட்டு இருப்பதாக தகவலின் பேரில் நேரில் வந்து பார்த்த போது கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
கடையில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் பணம், சிகரெட் பாக்கெட் உள்ளிட்ட பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரில் முதுகுளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர். டி.எஸ்.பி., சண்முகம் உத்தரவின் பேரில் போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்கின்றனர்.

