ADDED : ஜூன் 26, 2025 10:42 PM
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களான பான் மசாலா உள்ளிட்ட உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில், உப்பூர் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.
உப்பூர, பாலு மளிகை கடை கோடவுன், ரவி மளிகை ஆகிய பகுதிகளில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டதுடன், அங்கிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். திருப்பாலைக்குடி போலீசார் இரண்டு கடை உரிமையாளர்கள் மீதும் வழக்கு பதிந்தனர்.
உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கர்ணன் தலைமையில், இரண்டு கடைகளையும் பூட்டி தற்காலிகமாக சீல் வைத்தனர். கடை உரிமத்தையும் ரத்து செய்தனர். மேலும் இதுபோன்று அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் நிரந்தரமாக கடைகள் சீல் வைக்கப்படுவதுடன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.