/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குறுகிய கால பயிற்சி துவக்க விழா
/
குறுகிய கால பயிற்சி துவக்க விழா
ADDED : ஏப் 18, 2025 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கூட்டுறவுமேலாண்மை நிலையத்தில் 2025-26ம் ஆண்டிற்கான நகை மதிப்பீடு குறுகிய கால பயிற்சி துவக்க விழா நடந்தது.
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் ஓர் அங்கமான ராமநாதபுரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025- 26ம் ஆண்டிற்கான நகை மதிப்பீடும் அதன் தொழில்நுட்பமும் குறுகிய கால பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சியை ராமநாதபுரம் கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளர் ஜினு துவக்கி வைத்து புத்தகங்களை வழங்கினார்.
பொது விநியோக திட்ட துணைப்பதிவாளர்ராஜகுரு, முதல்வர் ரகுபதி, விரிவுரையாளர் தங்கமணி, பயிற்றுநர் முத்துராமன் பங்கேற்றனர்.

