ADDED : ஜூன் 20, 2025 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவிபட்டினம்:தேசிய நெடுஞ்சாலை தேவிபட்டினம் கோப்பேரிமடம் விலக்கிலிருந்து சித்தார்கோட்டை, அம்மாரி, புதுவலசை, பனைக்குளம், அழகன்குளம் பகுதிகளுக்கு செல்வதற்கு ரோடு வசதி உள்ளது.
கோப்பேரிமடம் - சித்தார்கோட்டை ரோட்டின் இரு ஓரமும் மண்ணரிப்பு ஏற்பட்டு ரோடு சேதம் அடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் நிலை உள்ளது. துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.