/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தோட்டக்கலை பண்ணைக்கு செல்ல வழிகாட்டும் பலகை
/
தோட்டக்கலை பண்ணைக்கு செல்ல வழிகாட்டும் பலகை
ADDED : ஏப் 16, 2025 10:33 PM

திருவாடானை: திருவாடானை அருகே ஓரியூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் மரக்கன்றுகள் வாங்க செல்லும் மக்கள் வழிகாட்டும் அறிவிப்பு பலகை இல்லாததால் அவதியடைந்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக வழிகாட்டும் பலகை வைக்கபட்டது.
திருவாடானை அருகே ஓரியூரில் 2018 ல் அரசு தோட்டக்கலை பண்ணை 36 ஏக்கரில் துவங்கப்பட்டது. 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். நிழல் குடில் அமைத்து பல்வேறு வகையான மரக்கன்றுகள் வளர்க்கபட்டு குறைந்த விலையில் விவசாயிகளுக்கு வழங்கபட்டு வருகிறது. விவசாயிகள் சென்று பழக்கன்றுகளை வாங்கி பயனடைகின்றனர்.
ஓரியூரிலிருந்து எஸ்.பி.பட்டினம் செல்லும் விலக்கு ரோட்டிலிருந்து 2 கி.மீ.,ல் தோட்டக்கலை பண்ணை உள்ளது. இப்பண்ணைக்கு செல்லும் மக்கள் விலக்கு ரோட்டில் நின்று கொண்டு வழி தெரியாமல் திண்டாடினர். தோட்டக்கலை பண்ணை அமைக்கும் போது வழிகாட்டும் போர்டு இருந்தது.
சில மாதங்களுக்கு முன்பு பலத்த காற்றில் சாய்ந்தது. அதை எடுத்து சென்ற அலுவலர்கள் மீண்டும் வைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் வழி தெரியாமல் சிரமம் அடைந்தனர். அந்தப் பக்கமாக வாகனங்களில் செல்பவர்களிடம் தோட்டக்கலை பண்ணை எங்கு உள்ளது என்று கேட்டு சென்றனர்.
இதுகுறித்த செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது. அதன் எதிரொலியாக வழிகாட்டும் பலகை வைக்கப்பட்டது.