/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வெறி நாய் கடித்து ஆறு பேர் காயம்
/
வெறி நாய் கடித்து ஆறு பேர் காயம்
ADDED : நவ 19, 2025 07:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை பகுதியில் நடந்து சென்றவர்களை வெறி நாய் துரத்திக் கடித்தது. வெள்ளையபுரம் பாலா, எல்.கே.நகர் கண்ணன், 6 வயது சிறுமி உட்பட 6 பேர் காயமடைந்தனர். அனைவரும் திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஊராட்சி செயலர் சித்ரா, மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி, துாய்மை பணியாளர்கள் நாய்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மக்கள் கூறுகையில், நாய்த் தொல்லை அதிகரித்துள்ளது. டூவீலர்களில் செல்வோர், பள்ளி மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் என்றனர்.

