/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கடலில் மிதக்கும் கழிவுகளால் மீன்களுக்கு ஆபத்து
/
ராமேஸ்வரம் கடலில் மிதக்கும் கழிவுகளால் மீன்களுக்கு ஆபத்து
ராமேஸ்வரம் கடலில் மிதக்கும் கழிவுகளால் மீன்களுக்கு ஆபத்து
ராமேஸ்வரம் கடலில் மிதக்கும் கழிவுகளால் மீன்களுக்கு ஆபத்து
ADDED : நவ 19, 2025 07:16 AM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் 600 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். இவர்கள் மீன் பிடித்து விட்டு படகுகளை கரையில் நிறுத்துவார்கள். மீனவர்கள் வலையில் சிக்கும் நண்டு, கணவாய், காரல் மீன்களை வியாபாரிகள் வாங்கி கடற்கரையில் உள்ள மீன் கம்பெனியில் ஐஸ், உப்பில் பதப்படுத்தி கழிவுகளை நீக்கி கடற்கரையில் கொட்டுவதால் கடலோரத்தின் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.
மீனவர்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக், பாலிதீன் மற்றும் குப்பையை கடலில் கொட்டுவதால் ராமேஸ்வரம் கடற்கரையில் பல இடங்களில் அதிகளவு குப்பை மிதக்கிறது. இதனால் கடலோரத்தில் வாழும் மீன்களுக்கு சுவாச பிரச்னை ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
கடல் மற்றும் மீன் வளத்தை நம்பி வாழும் மீனவர்கள், தனது வீடுகளை சுகாதாரமாக பராமரிப்பது போல் கடலையும் சுத்தமாக வைக்க வேண்டும். இதன் மூலம் மீன்கள் பாதுகாக்கப்படும் என கடல்சார் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.