/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்.எஸ்.மங்கலம் மருத்துவமனையில் சுகாதாரம் மேம்படுத்த வலியுறுத்தல்
/
ஆர்.எஸ்.மங்கலம் மருத்துவமனையில் சுகாதாரம் மேம்படுத்த வலியுறுத்தல்
ஆர்.எஸ்.மங்கலம் மருத்துவமனையில் சுகாதாரம் மேம்படுத்த வலியுறுத்தல்
ஆர்.எஸ்.மங்கலம் மருத்துவமனையில் சுகாதாரம் மேம்படுத்த வலியுறுத்தல்
ADDED : நவ 19, 2025 07:16 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் தேங்கி முறையான பராமரிப்பின்றி உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
மருத்துவமனைக்கு ரூ.1.70 கோடியில் புதிய மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஆனால் வளாகங்கள் முழுவதும் பராமரிப்பின்றி மழை நீர் மற்றும் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் தேங்கியுள்ள பள்ளங்களில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.
தற்போது சீதோஷ்ண நிலை காரணமாக ஆர்.எஸ். மங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் மருத்துவமனை வளாகம் பராமரிப்பின்றி சுகாதார சீர்கேட்டில் உள்ளதால் வரும் நோயாளிகள் மேலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
எனவே துறை அதிகாரிகள் மருத்துவமனை வளாகத்தில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றி சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

