/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீனவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
/
மீனவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : பிப் 09, 2024 04:18 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே மோர்ப்பண்ணை ராஜீவ் காந்தி மீன் வளர்ப்பு மையத்தில் மீனவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
துாத்துக்குடி கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் சார்பில் மீனவர்கள் மற்றும் துறைமுக தொழிலாளர்களுக்கு நடைபெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு கிராமத் தலைவர் ராஜதுரை தலைமை வகித்தார். மாநில முதன்மை செயலாளர் காளிதாஸ் முன்னிலை வகித்தார்.
பயிற்சியில் மீன்பிடி படகுகள் மற்றும் மீன் இறங்கும் மையங்களில் மூலப் பொருள்களை கையாளும் போது கடைப்பிடிக்க வேண்டிய தனிப்பட்ட சுகாதார அம்சங்கள் குறித்து மீனவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, உயிர் பாதுகாப்பு மற்றும் இயற்கை சீற்ற எச்சரிக்கைகளை முறையாக கடைப்பிடிக்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மீனவர்களுக்கான உபகரணங்களை ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய துணை இயக்குனர் டாக்டர் ஷஸ்லி வழங்கினார்.

