/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிறு குறு, நடுத்தர தொழில் முனைவோர் பயிற்சி முகாம்
/
சிறு குறு, நடுத்தர தொழில் முனைவோர் பயிற்சி முகாம்
ADDED : ஜன 10, 2025 04:48 AM
கீழக்கரை: கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில் மன்றம் சார்பில் தொழில் துறை தேவைகளுக்கான அறிவியல் தொழில் நுட்பத் திறன் மேம்பாடு என்ற தலைப்பில் ஆறு நாட்களில் இரண்டு கட்டங்களாக பயிற்சி முகாம் துவக்க விழா நடந்தது.
முதல்வர் சேக் தாவூத் தலைமை வகித்து பயிற்சி முகாமின் முக்கியத்துவம் பற்றி விளக்கிக் கூறினார். கல்லுாரி துணை முதல்வர் கணேஷ் குமார் வரவேற்றார். முதல் மூன்று நாள் பயிற்சியின் துவக்க விழாவில் சென்னை ஸ்ரீ கே.வி.எஸ். இண்டஸ்ட்ரியின் தலைவர் வெற்செழியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அவர் பேசுகையில், நவீன அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்களை அறிந்து கொள்வதற்கும், தொழில் துறையில் வேலை பெறுவதற்கு மாணவர்கள் தங்களை தயார் செய்வதோடு அதற்கான நுணுக்கங்களை மேம்படுத்திக் கொள்ளவும் இது போன்ற பயிற்சி முகாம் பயனளிக்கிறது என்றார்.
ராமநாதபுரம், சிவகங்கை, துாத்துக்குடி மாவட்டங்களில் இருந்து ஐந்து பாலிடெக்னிக் கல்லுாரிகளில் இருந்து 150 இறுதி ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். மின்னணுவியல் துறை தலைவர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.

