ADDED : நவ 15, 2024 06:51 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே புஷ்பவனம் கிராமத்தில் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக புதிதாக சிறுபாலம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது.
முதுகுளத்துார் அருகே புஷ்பவனம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு வரத்து கால்வாயை கடந்து செல்வதற்காக சிறுபாலம் அமைக்கப்பட்டது. பின் முறையாக பராமரிக்கப்படாததால் சேதமடைந்து இருந்தது.
பின் அவ்வப்போது மண் சரிவு ஏற்பட்டது. இதனால் நடப்பதற்கு சிரமப்பட்டு வந்தனர். இவ்வழியே நடந்து செல்லும் மக்கள் ஒருவித அச்சத்துடன் சென்றனர். அதிகாரியிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக வரத்து கால்வாயை கடந்து செல்வதற்காக புதிதாக சிறு பாலம் அமைக்கும் பணி நடக்கிறது.