/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கமுதி பகுதியில் செழித்து வளர்ந்த சிறுதானிய பயிர்கள்
/
கமுதி பகுதியில் செழித்து வளர்ந்த சிறுதானிய பயிர்கள்
கமுதி பகுதியில் செழித்து வளர்ந்த சிறுதானிய பயிர்கள்
கமுதி பகுதியில் செழித்து வளர்ந்த சிறுதானிய பயிர்கள்
ADDED : டிச 23, 2024 04:51 AM

கமுதி: கமுதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கம்பு, சோளம் உள்ளிட்ட சிறுதானியப் பயிர்கள் செழித்து வளர்ந்துள்ளது.
கமுதி வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் மானாவாரியாக நெல் பயிரிட்டு விவசாயம் செய்கின்றனர்.
அதற்கு அடுத்தபடியாக மிளகாய், சோளம், கம்பு, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியப் பயிர்கள் விவசாயம் செய்கின்றனர். சிறுதானியப் பயிர்களுக்கு குறைந்த அளவு தண்ணீர் போதுமானதால் விவசாயிகள் மூன்றில் ஒரு பங்கு நிலத்தில் சிறுதானியப் பயிர்கள் விவசாயம் செய்கின்றனர்.
கமுதி அருகே பேரையூர், நெறிஞ்சிப்பட்டி, இலந்தைகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்கின்றனர்.
அவ்வப்போது பெய்த மழையால் நன்கு செழித்து வளர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த மழையால் ஒரு சில கிராமங்களில் பயிர்கள் வீணாகியது.
இருந்த போதிலும் சிறுதானிய பயிர்கள் பயிரிட்ட நிலத்தில் தண்ணீர் தேங்காததால் பயிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது.