ADDED : நவ 20, 2025 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே மாதவன்கோட்டை அரசு தொடக்கப்பள்ளி சமையல் அறைக்குள் பாம்பு புகுந்தது. திருவாடானை அருகே மாதவன்கோட்டையில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இக்கட்டடம் அருகே சமையல் கூடத்தில் நேற்று மதியம் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்ட நிலையில் 1:00 மணிக்கு சமையல் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த விறகுகளுக்குள் ஒரு சாரை பாம்பு புகுந்தது.
சமையல் உதவியாளர்கள் அலறியடித்து வெளியே ஓடினர். திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் முருகானந்தம் மற்றும் வீரர்கள் சென்று பாம்பை பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டனர்.
அதனை தொடர்ந்து பள்ளிக்குள் பாம்புகள் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது.

